Settings

முகப்பு/செய்திகள்/உரிமைகளை மீட்டெடுக்க TNCSC தொழிலாளர்கள் போராட்டம் - திருப்பத்தூரில் பரபரப்பு!
செய்திகள்

உரிமைகளை மீட்டெடுக்க TNCSC தொழிலாளர்கள் போராட்டம் - திருப்பத்தூரில் பரபரப்பு!

🕒 4 நவ., 2026, 08:31 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
உரிமைகளை மீட்டெடுக்க TNCSC தொழிலாளர்கள் போராட்டம் - திருப்பத்தூரில் பரபரப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் TNCSC சுமை தூக்கும் தொழிலாளர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக (TNCSC) சுமை தூக்கும் தொழிலாளர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் உள்ள சிவராஜ் லாட்ஜ் அருகில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள TNCSC மண்டல அலுவலகங்களை முற்றுகையிட்டு நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருப்பத்தூரிலும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

முக்கிய கோரிக்கைகள்:

  • சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான சங்க அங்கீகாரத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
  • 12.07.2025-க்கு முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்ட 60 சதவீத கூலி உயர்வை வழங்க வேண்டும்.
  • வருகைப் பதிவேட்டில் அனைத்து தொழிலாளர்களின் பெயர்களையும் சேர்க்க வேண்டும்.
  • 2022-ஆம் ஆண்டை முன் தேதியாகக் கொண்டு பச்சை அட்டை வழங்க வேண்டும்.
  • ஆதார் இணைப்பில் நிர்வாகம் தரப்பில் ஏற்பட்டுள்ள பிழைகளை நிர்வாகமே உடனடியாகத் சரிசெய்ய வேண்டும்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் TNCSC சுமை தூக்கும் தொழிலாளர்களின் கூலியில் முறைகேடு செய்து உழைப்பைச் சுரண்டியதாகக் கூறப்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கள்ளக்குறிச்சி TNCSC முதுநிலை மண்டல மேலாளரின் செயல்பாடுகளைக் கண்டித்தும் சங்கத்தினர் முழக்கமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கட்டிடத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற தொழிலாளர்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருப்பத்தூர் நகர போலீசார் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு தடுத்து நிறுத்தினர். பின்னர், இணைப்பதிவாளர் ஜெயம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
வாக்காளர் பட்டியல் திருத்தம் 2027: வால்பாறையில் நடைபெற்ற சிறப்பு முகாம்!செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2027: வால்பாறையில் நடைபெற்ற சிறப்பு முகாம்!

S. Ravichandran🕒 நவ. 22
சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!

Rajan🕒 நவ. 22
பணியில் இருந்த பாதுகாவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருச்சி மாவட்டத்தில் சோகம்!நகரங்கள்

பணியில் இருந்த பாதுகாவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருச்சி மாவட்டத்தில் சோகம்!

Ramachandran🕒 நவ. 22
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔