சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..
செய்திகள்

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..

The News Outlook
🕒 14 ஜூலை, 2026, 04:09 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம்  சதுரகிரி கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் .இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது . இந்த கோயிலில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது இந்த கோயிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் விசேஷ நாட்கள் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயில் அடிவாரப் பகுதியில் குவிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...