சாத்தூர் அருகே குடும்ப தகராறில் கணவனை குத்தி கொலை செய்த மனைவியை தாலுகா போலீசார் கைது செய்துள்ளனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சங்கராபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் மணி(34)இவர் முள்ளு சேவல் அருகே உள்ள தனியார் அட்டை மில்லில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மணிக்கும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தை சேர்ந்த திவ்ய பாரதி (24 ) இருவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த தம்பதியினர் சங்கராபுரம் கிராமத்தில் தனியாக வசித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டு களாக இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது மேலும் இந்த பிரச்சினையால் மணி மற்றும் அவரது மனைவி திவ்ய பாரதிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்து உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் தினமும் மது போதையில் வரும் மணி மனைவி திவ்யா பாரதி மீது சந்தேகத்தின் பேரில் தகராறில் ஈடுபட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றும் இரவும் மது போதையில் வந்த மணிக்கும் திவ்ய பாரதிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது இதனால் ஆத்திரம் அடைந்த திவ்யபாரதி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மணியை தலை மற்றும் மர்ம உறுப்பு பகுதியில் குத்தி உள்ளார். இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மணி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த நிலையில் சம்பவம் அறிந்து வந்த உறவினர்கள் கத்தி குத்து விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மணியை மீட்டு அருகில் உப்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு மணியை சேர்ந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் மணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் அறிந்து கொலை செய்யப்பட்ட மணியின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி திவ்யா பாரதி சம்பவ இடத்தில் மயக்கம் அடைந்த நிலையில் இருந்த வரை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக உப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்த நிலையில் தற்போது காவல் துறையினர் பாதுகாப்புடன் திவ்யா பாரதி சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி திவ்யா பாரதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குடும்ப தகராறில் கணவனை குத்தி கொலை செய்த மனைவியை தாலுகா போலீசார் கைது செய்துள்ளனர்*
The News Outlook
🕒 8 ஜூலை, 2026, 04:33 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

