விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை.... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோபாலபுரம் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மேல்நிலை நீர் தேக்க தொட்டி சேதம் அடைந்து கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது . மேலும் நீர்த்தேக்க தொட்டியின் 4 தூண்களும் பல இடங்களில் விரிசல்கள் விட்டு எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் குடியிருப்பு வீடுகள் அதிகமாக இருப்பதால் பெரும் விபத்து ஏற்படுவதற்குள் சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்துவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை..
The News Outlook
🕒 14 ஜூலை, 2026, 12:39 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

