விருதுநகரில் டாஸ்மாக் மது பாட்டில்களை ஏற்றி செல்வதற்கான லாரி ஒப்பந்தம் பெற்று தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் இந்நிலையில் கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டதாக கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்
செய்திகள்
டாஸ்மாக் மோசடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்
The News Outlook
🕒 2 ஆக., 2026, 05:16 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
