சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலை பணிகள்,கிராம மக்கள்,வாகன ஓட்டிகள் அவதி அவதி.!
செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலை பணிகள்,கிராம மக்கள்,வாகன ஓட்டிகள் அவதி அவதி.!

The News Outlook
🕒 4 ஆக., 2026, 04:40 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலை பணிகள்,கிராம மக்கள்,வாகன ஓட்டிகள் அவதி அவதி.!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கீழ பொட்டல்பட்டி கிராம பகுதியில் தார் சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்த நிலையில் சாலையை சீரமைக்க பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது.இதில் சல்லி கற்கள் கொட்டப்பட்டு மெட்டல்கள் விரிக்கப்பட்டு நான்கு மாதங்கள் மேலாகியும் தற்போது வரை தார் ஊற்றி சாலை அமைக்காததால் கிராம மக்கள்,வாகன ஓட்டிகள்,பள்ளி மாணவர்கள், விவசாய பொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயங்களும் ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனையாக தெரிவிக்கின்றனர். இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளு தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.உடனடியாக மாவட்ட நிர்வாகம் கீழ பொட்டல்பட்டி கிராமத்தில் விரிக்கப்பட்ட மெட்டல் சாலை மீது தார் ஊற்றி புதிய சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...