சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
செய்திகள்

தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

🕒 1 செப்., 2026, 06:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

AI Highlights

  • தமிழகத்தில் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வாகன வகைக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.395 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழகத்தில் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் சுங்கக் கட்டண திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பல்வேறு சுங்கச்சாவடிகளில் வாகன வகைக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.395 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 77 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி கட்டணம் உயர்த்தப்பட்டது.

அந்த நேரத்தில் கட்டண உயர்வு செய்யப்படாத மீதமுள்ள 26 சுங்கச்சாவடிகளிலும் தற்போது ஆண்டுக் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔