சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ரோசல்பட்டி ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் முற்றுகைப் போராட்டம்
செய்திகள்

ரோசல்பட்டி ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் முற்றுகைப் போராட்டம்

The News Outlook
🕒 31 ஜூலை, 2026, 10:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ரோசல்பட்டி ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் முற்றுகைப் போராட்டம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ரோசல்பட்டி ஊராட்சியில் தங்களை வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணியில் மட்டுமே ஈடுபடுத்தி வந்த நிலையில், தற்போது ஊராட்சியின் அனைத்துச் சாலைகளையும் தங்களையே சுத்தம் செய்யுமாறு ஊராட்சி நிர்வாகம் வற்புறுத்துவதாகத் தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், தற்போதைய பணி மேற்பார்வையாளர் சரிவரப் பணியாற்றுவதில்லை எனக் குறிப்பிட்ட அவர்கள், தங்களில் ஒருவரையே புதிய பணி மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இக்கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திரளாகப் பங்கேற்று தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...