விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்திற்கு தயாராகி வரும் ஸ்ரீ ஆண்டாள் தேர்...விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் தமிழகத்திலேயே மிகசிறப்பு வாய்ந்ததாகும் இத்திருவிழாவிற்கு தேரை தயார் செய்யும் பணிகள் துவங்கியது தண்ணீர் பாய்ச்சி சுத்தம் செய்யும் பணியினை கோவில் ஊழியர்கள் செய்து பின்னர் தேர் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆடிப்பூர திருவிழா துவங்குகிறது. வருகின்ற ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு தேரை தயார் செய்யும் பணிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்த குழுவினர் கடந்த சில நாட்களாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொடியேற்றத்திற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார். பல்வேறு அலங்காரத்திலும் மற்றும் வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறும். திருவிழாவின் நிறைவு நாளான ஆகஸ்ட் 14 ஆம் தேதி திருத்தேராட்டத் திருவிழா நடைபெற உள்ளது இவ்விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரோட்ட திருவிழாவை காணவருவதும் வடம் பிடித்து இழுப்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்திற்கு தயாராகி வரும் ஸ்ரீ ஆண்டாள் தேர்...
The News Outlook
🕒 9 ஜூலை, 2026, 05:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

