சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 6 மாணவர்கள் படுகாயம்
செய்திகள்

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 6 மாணவர்கள் படுகாயம்

The News Outlook
🕒 6 ஆக., 2026, 01:54 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 6 மாணவர்கள் படுகாயம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் அருகே பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். விருதுநகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு தனியார் வேன் ஒன்று ஆயுதப்படை வளாகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த வேனை சூலக்கரையைச் சேர்ந்த பழனி (27) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். வேன் சூலக்கரை பகுதியில் உள்ள தனியார் ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலம் பணிகள் நடைபெறும் இடத்தில் பலத்தின் தடுப்புச் சுவரில் மோதிப் தலைகீழாகக் கவிழ்ந்தது. இவ்விபத்தில் வேனில் பயணம்பண்ணிய பின்வரும் 6 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். யுவஹரிஷ்வரன் (14),சபரிஸ்வரன் (13) (யுவஹரிஷ்வரனின் தம்பி) இவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் ஜீவிதா (11), கதிர்வேலன் (12), வேதாஸ்ரீ (12), தமிழ் மாரிவேல் (7) விபத்து நடந்தவுடனே, வேன் ஓட்டுநர் வேல்முருகன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். விபத்து குறித்துத் தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த மாணவ-மாணவிகளை மீட்டுச் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிய ஓடிய வேன் ஓட்டுநர் பழனியை தேடி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...