விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இரண்டு பெரிய பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து விளையாடும் காட்சி அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பெரிய புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளதால், அங்கு பாம்புகளின் நடமாட்டம் இயல்பாகவே காணப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை பெரிய புளியம்பட்டியில் உள்ள பொது சுகாதார வளாகம் அருகே சுமார் 7 அடி நீளம் கொண்ட இரண்டு பெரிய பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து விளையாடியதை அப்பகுதியினர் பார்த்துள்ளனர்.
இக்காட்சியைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள், தங்களது கைபேசியில் அதனை வீடியோவாகப் பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட நிலையில், தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

