கோபிசெட்டிபாளையம் அடுத்த தாசம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பொன்னாயாள். இவர் தன் கணவருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் வீட்டில் குளிப்பதற்காக விறகடுப்பில் வெந்நீர் காயவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. கண்மூடித்தனமாகப் பற்றிய தீ மளமளவென பரவியதில், அவருக்கு சுமார் 70 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த தீ விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









