Settings

முகப்பு/செய்திகள்/தீபத் திருவிழா பாதுகாப்புப் பணி முடிந்து திரும்பியபோது சோகம்: கழிவறையில் காவலர் சடலம்!
செய்திகள்

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணி முடிந்து திரும்பியபோது சோகம்: கழிவறையில் காவலர் சடலம்!

🕒 26 நவ., 2026, 10:32 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தீபத் திருவிழா பாதுகாப்புப் பணி முடிந்து திரும்பியபோது சோகம்: கழிவறையில் காவலர் சடலம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் வடிவழகன், மங்கலம் அரசுப் பள்ளி கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் வடிவழகன், மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பூட்டிய கழிவறைக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. இதில் மகா தேரோட்டம் மற்றும் மகா தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 15,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பாக, திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தீபத் திருவிழா நிறைவடைந்ததை அடுத்து, நேற்று மாலை முதல் காவலர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பத் தொடங்கினர்.

அப்போது, பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த ஆவடி 13-வது அணியைச் சேர்ந்த சிறப்புக் காவலர் வடிவழகன், பள்ளியில் உள்ள பூட்டிய கழிவறைக்குள் சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கழிவறைக் கதவை உடைத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, காவலர் வடிவழகனின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!செய்திகள்

பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!

SRIDHAR🕒 நவ. 26
குழந்தைகளின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலம்! நாமக்கல்லில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணிசெய்திகள்

குழந்தைகளின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலம்! நாமக்கல்லில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

SRIDHAR🕒 நவ. 26
அரசியலமைப்பு தினம்: திருவண்ணாமலையில் உறுதிமொழி ஏற்ற அரசு அலுவலர்கள்!நகரங்கள்

அரசியலமைப்பு தினம்: திருவண்ணாமலையில் உறுதிமொழி ஏற்ற அரசு அலுவலர்கள்!

Manimaran🕒 நவ. 26
வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!நகரங்கள்

வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!

ARAVINDHAN🕒 நவ. 26
ஒன்றிய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் திரண்ட விவசாயிகள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு

ஒன்றிய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் திரண்ட விவசாயிகள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

SRIDHAR🕒 நவ. 26
ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்அரசியல்

ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்

SASHVI🕒 நவ. 26
அரசியலமைப்புச் சட்ட முகப்புரை உறுதிமொழி: வெண்ணந்தூரில் விசிகவினர் எழுச்சி!நகரங்கள்

அரசியலமைப்புச் சட்ட முகப்புரை உறுதிமொழி: வெண்ணந்தூரில் விசிகவினர் எழுச்சி!

SRIDHAR🕒 நவ. 26
தீயணைப்புத் துறையின் அதிரடி செயல்விளக்கம்: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!நகரங்கள்

தீயணைப்புத் துறையின் அதிரடி செயல்விளக்கம்: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ARAVINDHAN🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔