Settings

முகப்பு/தமிழ்நாடு/ஒன்றிய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் திரண்ட விவசாயிகள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு

ஒன்றிய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் திரண்ட விவசாயிகள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

🕒 26 நவ., 2026, 09:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஒன்றிய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் திரண்ட விவசாயிகள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஒன்றிய அரசைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தங்களது வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தின் 6ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. பெருமாள் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி. டில்லிபாபு உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும், விவசாயிகளும் திரளாகக் கலந்து கொண்டனர்.

முக்கியக் கோரிக்கைகள்:

  • விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.
  • C2+50 சதவீத அடிப்படையில் அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த 736 விவசாயிகளின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
  • 60 வயது நிறைவடைந்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
  • மின்சாரத் துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.
  • 2025ஆம் ஆண்டு விதை மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்.
  • தொிலாளர் உரிமைகளைப் பறிக்கும் நான்கு தொகுப்புச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தி, மாற்றுக் கொண்டுவரப்படும் திட்டங்களைக் கைவிட வேண்டும்.

டெல்லி போராட்டத்தின்போது விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாத ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் மட்டுமின்றி தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ரேஷன் கடைகளில் தற்காலிக நியமனம் எதிர்த்து தமிழகம் முழுவதும் பரபரப்பு போராட்டம்!தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் தற்காலிக நியமனம் எதிர்த்து தமிழகம் முழுவதும் பரபரப்பு போராட்டம்!

NESARAJAN🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்தமிழ்நாடு

நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

NESARAJAN🕒 நவ. 23
பாதுகாப்புக்கு உயர் தொழில்நுட்பம்: நாகப்பட்டினத்தில் பறக்கும் ட்ரோன் கேமராக்கள்!தமிழ்நாடு

பாதுகாப்புக்கு உயர் தொழில்நுட்பம்: நாகப்பட்டினத்தில் பறக்கும் ட்ரோன் கேமராக்கள்!

Sugumaran🕒 நவ. 23
அரசுப் பேருந்து - ராணுவ வாகனம் மோதல்; 50 வீரர்கள் உயிர் தப்பினர்!செய்திகள்

அரசுப் பேருந்து - ராணுவ வாகனம் மோதல்; 50 வீரர்கள் உயிர் தப்பினர்!

MSD🕒 நவ. 26
சாக்லேட் வடிவில் போதைப்பொருள்! திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி பறிமுதல்!செய்திகள்

சாக்லேட் வடிவில் போதைப்பொருள்! திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி பறிமுதல்!

MSD🕒 நவ. 26
வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!நகரங்கள்

வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!

ARAVINDHAN🕒 நவ. 26
பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!செய்திகள்

பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!

SRIDHAR🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔