நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஆதித்தமிழர் பேரவை சார்பில் வீரமங்கை தோழர் ராணியின் நினைவு நாளை முன்னிட்டு மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முக்கிய கோரிக்கைகள்:
- தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முரளீதரனை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
- அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும்.
- பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மாணவர்கள் அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.









