தேசிய பால் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், பாதசிறுகுடி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கால்நடை மருத்துவர் சுபலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குடுமியான்மலை அரசு வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் கலந்துகொண்டு, அப்பகுதி கால்நடை வளர்ப்போருக்கு பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர்.
முகாமின் முக்கிய அம்சமாக, மாடுகளில் ஏற்படும் மடி வீக்கம் (Mastitis) நோயின் அறிகுறிகள், அது ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதлிருந்து பாதுகாத்துக்கொள்ளும் தடுப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது.
மேலும், கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும், பால் உற்பத்தியை கணிசமாக அதிகரிப்பதிலும் சமச்சீர் கால்நடைத் தீவனத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தரமான தீவனத்தைத் தேர்ந்தெடுக்கும் முறைகள், உரிய அளவில் தீவனம் வழங்குதல் மற்றும் சுகாதாரமான முறையில் கால்நடைகளைப் பராமரிப்பது போன்ற அவசியமான ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் மூலம் கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகளை விவசாயிகள் தெரிந்துகொண்டனர்.









