ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவியருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி என்ற பகுதியில் கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதல்வரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தையல் மிஷின், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சேலை, வீட்டுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவைகள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தான் போட்டியிடுவதற்காக தனக்கு நள்ளிரவு 1:30 மணிக்கு அழைப்பு வந்ததாகவும் 2 மணிக்கு கிளம்பி காலையில் 10:00 மணிக்கு சென்றடைந்ததாகவும் தனக்காக விஜய் உள்ளிட்ட மற்ற வேட்பாளர்கள் காத்திருந்ததாகவும் கூறினார். மேலும் தலைமைச் செயலகத்திற்கு தாங்கள் செல்லும்போது தாங்கள் தான் சட்டமன்ற உறுப்பினர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு உள்ளது என்றும் அந்த அளவிற்கு தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் மிக எளிமையாக உள்ளதாகவும் கூறினார்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...
The News Outlook
🕒 13 ஜூலை, 2026, 05:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
