தேசிய நெடுஞ்சாலை - 744 அமைக்கும் பணிக்காக நிலம் வழங்கி, இதுவரை இழப்பீட்டுத் தொகை பெறாத நில உரிமையாளர்களுக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வடுகபட்டி முதல் தெற்குவெங்காநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை - 744 நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய உரிமையாளர்களிடமிருந்து உரிய ஆவணங்களைப் பெற்று, விரைவாக இழப்பீட்டுத் தொகை வழங்கும் நோக்கில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் இச்சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
முகாம்கள் நடைபெறும் நாட்கள் மற்றும் இடங்கள்:
இராஜபாளையம் வட்டம்:
- 05.08.2026: புத்தூர் கிராமம்
- 06.08.2026: மேலூர்துரைசாமிபுரம் கிராமம்
- 07.08.2026: சமுசிகாபுரம் கிராமம்
- 10.08.2026: இளந்திரைகொண்டான் கிராமம்
- 18.08.2026: தெற்குவெங்காநல்லூர் கிராமம்
- 20.08.2026: மேலராஜகுலராமன் கிராமம்
திருவில்லிபுத்தூர் வட்டம்:
- 04.08.2026: நத்தம்பட்டி கிராமம்
- 06.08.2026: அத்திகுளம் செங்குளம் கிராமம்
- 10.08.2026: அயன் நாச்சியார்கோவில் (தெய்வேந்திரி) கிராமம்
- 17.08.2026: பூவாணி, நல்லிங்கபேரி, பாட்டக்குளம் மற்றும் சல்லிப்பட்டி கிராமங்கள்
- 19.08.2026: களத்தூர், அம்மாபட்டி மற்றும் மூவரை வென்றான் கிராமங்கள்
- 21.08.2026: பிள்ளையார்குளம் கிராமம்
- 25.08.2026: குன்னூர் கிராமம்
- 27.08.2026: விழுப்பனூர் கிராமம்
எனவே, தேசிய நெடுஞ்சாலை – 744 பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, இதுவரை உரிமை குறித்த ஆவணங்களைச் சமர்ப்பிக்காத நில உரிமையாளர்கள், குறித்த நாட்களில் நடைபெறும் இச்சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு ஆவணங்களைச் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

