நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மலை நம்பிகோவிலுக்கு பக்தர்கள் செல்லவும், அங்குள்ள சூழல் சுற்றுலா பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை நம்பிகோவிலுக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து சென்று வழிபடுவது வழக்கம். குறிப்பாக, சனிக்கிழமைகளில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படும். இந்த நிலையில், தற்போது இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட மலை நம்பிகோவில் மற்றும் நம்பிகோவில் சூழல் சுற்றுலா பகுதிகளுக்குச் செல்ல இன்று முதல் 18.08.2026 பக்தர்கள் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது .மேலும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள நீர்நிலைகளில் குளிப்பதற்கு அனுமதி இல்லை. நம்பிகோவில் சூழல் சுற்றுலா பகுதியை பார்வையிடவும் முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. வனத்துறையின் இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
செய்திகள்
யானைகள் நடமாட்டம்: திருக்குறுங்குடி மலை நம்பிகோவில் மற்றும் சூழல் சுற்றுலா பகுதிக்கு பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் செல்ல இன்று முதல் தடை
🕒 18 ஆக., 2026, 09:41 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
