சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
செய்திகள்

விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

The News Outlook
🕒 10 ஆக., 2026, 01:19 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், இன்று மாலை பெய்த மிதமான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விருதுநகர் பகுதியில் காலை முதலே அதிக வெப்பநிலை நிலவியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலை நேரத்தில் வானில் திடீரென மேகங்கள் திரண்டு காணப்பட்டன.

இதனைத் தொடர்ந்து விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சூலக்கரை, பாண்டியன் நகர், அல்லம்பட்டி, சின்னவள்ளிகுளம், சத்திரரெட்டியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. மேலும், பகலில் நிலவிய கடுமையான வெப்பம் தணிந்து இதமான வானிலை நிலவியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

திடீரென பெய்த மழை விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், நீண்ட நேரம் நிலவிய வெப்பத்திற்கும் ஓரளவு நிவாரணம் கிடைத்தது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔