சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/நாங்குநேரி அருகே ரூ.17 கோடி மதிப்பிலான 3,550 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு...!
செய்திகள்

நாங்குநேரி அருகே ரூ.17 கோடி மதிப்பிலான 3,550 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு...!

The News Outlook
🕒 11 ஆக., 2026, 06:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாங்குநேரி அருகே ரூ.17 கோடி மதிப்பிலான 3,550 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு...!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பொத்தையடி கிராமத்தில் உள்ள அசெப்டிக் சிஸ்டம்ஸ் பயோ மெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தனியார் எரியூட்டும் மையத்தில், நெல்லை, திண்டுக்கல், மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 1,021 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.17 கோடி மதிப்பிலான 3,550 கிலோ கஞ்சா நீதிமன்ற உத்தரவின்படி இன்று தீயிட்டு அழிக்கப்பட்டது. போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக நாங்குநேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு, திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன், மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார், ராமநாதபுரம் சரக டிஐஜி மணிவண்ணன் ஆகியோர் உறுதி மொழி எடுத்தனர். அதனை தொடர்ந்து மற்ற காவல் துறை அதிகாரிகள் போதைக்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாவட்ட டிஐஜி முன்னிலையில் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. நெல்லை, திண்டுக்கல், மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, நீதிமன்ற உத்தரவின்படி போலீசாரின் பாதுகாப்புடன் எரியூட்டும் மையத்தில் தீயிலிட்டு முறையாக அழிக்கப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் நாங்குநேரி அருகே உள்ள தனியார் எரியூட்டும் மையத்தில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔