திண்டிவனம் உழவர் சந்தையில், உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திண்டிவனம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமிற்கு, சங்கத்தின் தலைவர் ஐங்கரன்சிவகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் நிவேதிதா, ராஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர்கள் பாலாஜி, லோகநாதன் ஆகியோர் வருகை தந்தவர்களை வரவேற்றனர்.
மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சரவணன் முகாமைத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் சுந்தரம், வேல்முருகன், மண்டல தலைவர் சஞ்சீவி, சங்க நிர்வாக அலுவலர் கார்த்திக்கருணாகரன், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கருப்பையா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுபவர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். நிறைவாக, பொருளாளர் வெங்கடேஷ்குமார் நன்றியுரை ஆற்றினார்.









