விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்வார்கள். இந்நிலையில் தேர் என்பது நான்கு ரத வீதிகளின் வழியாக வரும்போது ஆக்கிரமிப்புகளை வருடந்தோறும் அகற்றும் பணி என்பது நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி வீதிகளில் நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலை துறையினர் காவல் துறையினர் உதவியுடன் ஆக்கிரம்புகளை அகற்றி வந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாத இடத்திலும் வணிகர்களின் கடை வழி பாதைகளையும் ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்றியதால் அரசு அதிகாரிகளிடம் வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொழில்வரி, வணிகவரி,கடை தீர்வு வரி உள்ளிட்டவைகளை வாங்கிக் கொண்டு ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குவதாகவும் வாறுகால்களில் சில ஆண்டுகளாக அடைப்புகள் ஏற்பட்டு அதை சரி செய்யாமல் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்ய முன்வராத நகராட்சி நிர்வாக அதிகாரிகள் முரண்பாடாக செயல்படுவதாக கேள்விகளை எழுப்பினர். காவல்துறையினர் அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு முரண்பாடாக ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்., பொதுமக்கள்.
The News Outlook
🕒 4 ஆக., 2026, 11:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
