சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/அரசு செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
செய்திகள்

அரசு செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

The News Outlook
🕒 7 ஆக., 2026, 02:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரசு செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதிய பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு செவிலியர் சங்கம் சார்பில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

அரசு செவிலியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக் கிளைச் செயலாளர் சியாமளா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகள்:

  • அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாகக் கண்டறிந்து, புதிய செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
  • தொகுப்பூதிய முறையை முற்றிலும் ரத்து செய்து, பணியில் உள்ள செவிலியர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
  • பணி நிரவல் (Deployment) என்ற பெயரில் ஊழியர்களைத் தொலைதூர இடங்களுக்குப் பணியிட மாற்றம் செய்து, அவர்களின் மன அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.
  • மத்திய அரசுப் பணியாளர்களைப் போல் 'செவிலியர்' என்ற பணியிடப் பெயரை 'நர்சிங் ஆபீசர்' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...