விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு அங்கன்வாடி மையம் மற்றும் கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான நியாய விலைக் கடையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நடத்தியதாக கூறப்படும் நிகழ்வுகளின் ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்திக்குமார் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை மாட்டி, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியதாக கூறப்படும் காட்சிகள் அந்த ரீஸ்ஸ் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல், சில நாட்களுக்கு முன்பு கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான நியாய விலைக் கடையில், அருப்புக்கோட்டை த.வெ.க. நகரச் செயலாளர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிகழ்விலும் முதலமைச்சரின் புகைப்படம் மாட்டப்பட்டு, ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து, குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நலத் திட்ட மையங்களில் அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டதா? அரசு இடங்கள் அரசியல் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டதா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. மேலும், கட்சித் தலைமையின் வழிகாட்டுதல்களை மீறி, அரசு வளாகங்களில் இதுபோன்ற ரீல்ஸ் வீடியோக்களை தொடர்ந்து வெளியிடும் நிர்வாகிகளின் செயல்பாடு தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேவையற்ற சர்ச்சையையும் அரசியல் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடையில் த.வெ.க. நிர்வாகிகள் ரீல்ஸ் – வைரலாகும் வீடியோக்களால் சர்ச்சை
The News Outlook
🕒 21 ஜூலை, 2026, 07:19 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
