தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை கிழக்கு மாவட்டம், சிங்கை பகுதி 3, 59-வது வட்டக் கழகத்தின் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வரதராஜபுரம் மேடு, மகாலட்சுமி கோவில் பின்புறம் அமைந்துள்ள பாலாஜி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ கிரி பிரசாத் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் தலைமை தாங்கினார். இந்த மருத்துவ முகாமானது, 'தி ஜே பவுண்டேஷன்', கண் மருத்துவமனை மற்றும் 'பீப்பிள்ஸ் மருத்துவமனை' ஆகியவை இணைந்து நடத்தப்பட்டது. இந்த முகாமில், பொது மருத்துவம், இலவச கண் அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய் சிகிச்சை, குழந்தைகள் நலம், பெண்கள் நலன், தோல் மற்றும் பல் மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டன. காலை முதல் மதியம் வரை நடைபெற்ற இந்த முகாமில், பொது மருத்துவம் மற்றும் கண் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச மருத்துவம் ஆலோசனை மற்றும் இலவசம் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. இதனை கோவை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் டாக்டர் K. லோகநாதன் முன் நின்று நடத்தி முகாமினை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் 59-வது வார்டு செயலாளர் M. வெள்ளிங்கிரி, இளைய திலகம், எஸ். ஆர் சந்திரன் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர். முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு பயனடைந்தனர்.
செய்திகள்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்
The News Outlook
🕒 20 ஜூலை, 2026, 06:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

