விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி பட்டாசு ஆலையில் சாம்பல் மூடைகளில் தீப்பற்றி தீ விபத்து ஏற்பட்டது.தீயணைப்புத்துறையினர் தீயை மேலும் பரவ விடாமல் தடுத்து அணைத்தனர். விருதுநகர் அருகே உள்ளது ஓ கோவில்பட்டி. இங்கு அதை ஊரைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசாலை ஒன்று உள்ளது.இந்த பட்டாசாலை சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் டி ஆர் ஓ லைசன்ஸ் உடன் இயங்கி வருகிறது . இந்த பட்டா சாலையில் நேற்று இரவு சாம்பல் மூடைகளை இறக்கி வைத்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலை கழிவுகளை வழக்கம் போல் கொளுத்தி விட்டு அதை சரியாக அடைக்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வலைக்குள் இருந்து புகை வருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இது குறித்து விருதுநகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அங்கு பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். விடுமுறை தினம் என்பதால் யாருக்கும் காயம் இல்லை வேறு சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
செய்திகள்
விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி பட்டாசு ஆலையில் தீ விபத்து.
The News Outlook
🕒 2 ஆக., 2026, 04:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

