Settings

முகப்பு/செய்திகள்/மிருகங்களைப் போல குப்பை வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்! கொதித்தெழுந்த ஊழியர்கள்!
செய்திகள்

மிருகங்களைப் போல குப்பை வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்! கொதித்தெழுந்த ஊழியர்கள்!

🕒 24 நவ., 2026, 07:36 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மிருகங்களைப் போல குப்பை வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்! கொதித்தெழுந்த ஊழியர்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •நாகூர் கந்தூரி விழா தூய்மைப் பணிக்குச் சென்றுவிட்டு குப்பை வாகனத்தில் 60 கி.மீ பயணம் செய்த மயிலாடுதுறை நகராட்சி பணியாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாகூர் கந்தூரி விழா தூய்மைப் பணிகளுக்காகச் சென்ற மயிலாடுதுறை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை குப்பை சேகரிக்கும் சரக்கு வாகனத்தில் 60 கிலோமீட்டர் தூரம் ஏற்றி வரப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எந்தவிதப் பணப்பயனும் வழங்கப்படாமல், வாகனத்தில் பயணம் செய்தது தொடர்பாக பணியாளர்களுக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் 70 பேர் நிரந்தர தூய்மைப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். நாகை மாவட்டம், நாகூரில் நடைபெற்ற புகழ்பெற்ற கந்தூரி விழாவில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக இவர்களில் 15 பேர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாகூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்குப் பணிகளை முடித்துவிட்டு நேற்று மாலை அவர்கள் மயிலாடுதுறைக்குத் திரும்பினர்.

பணியாளர்கள் திரும்பி வருவதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் முறையான வாகன வசதி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திடக்கழிவு மேலாண்மைக்குப் பயன்படுத்தப்படும் குப்பை அள்ளும் சரக்கு வாகனத்தில் 15 தூய்மைப் பணியாளர்களும், கால்நடைகளை ஏற்றிச் செல்வது போன்ற அவல நிலையில் 60 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர்.

மேலும், திரும்பி வருவதற்கு வாகனம் ஏற்பாடு செய்யாததுடன், தங்களுக்கு எந்தவிதமான பயணப்படியும் வழங்கப்படவில்லை என்றும், குப்பை சேகரிக்கும் வாகனத்திற்கு நகராட்சி தரப்பில் டீசல் வழங்கப்படாததால், தாங்கள் கடன் வாங்கி டீசல் போட்டுக் கொண்டு இந்தச் சரக்கு வாகனத்தில் வந்ததாகவும் தூய்மைப் பணியாளர்கள் ஆதங்கம்  தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வாசலில் நின்ற அதிகாரிகளை முற்றுகையிட்டுப் பணியாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்கள் வேலை என்று கூறி அழைத்துச் சென்று, 11 நாட்களாகத் தொடர்ந்து வேலை வாங்கியதாகவும், ஆனால் ஊதியமோ பணப்பயனோ எதுவும் வழங்காமல் வெறும் பாராட்டுச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். அதிகாரிகளுடன் பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!

Admin🕒 நவ. 24
நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிரடி வீட்டுக் காவலில் வைப்பு!செய்திகள்

நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிரடி வீட்டுக் காவலில் வைப்பு!

Vijayaragavan🕒 நவ. 24
சொத்துக்காக அண்ணனையே தீர்த்துக்கட்டிய தம்பி! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!செய்திகள்

சொத்துக்காக அண்ணனையே தீர்த்துக்கட்டிய தம்பி! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Srinivasan🕒 நவ. 24
அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவித் தலைமையாசிரியர் கைது!செய்திகள்

அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவித் தலைமையாசிரியர் கைது!

Arivazhagan🕒 நவ. 24
தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!இந்தியா

தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!

Srinivasan🕒 நவ. 24
திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!ஆன்மீகம்

திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!

Nivedha🕒 நவ. 24
தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு.செய்திகள்

தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு.

Kannan🕒 நவ. 24
பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!ஆன்மீகம்

பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!

Manimaran🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔