சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - விவசாய பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
செய்திகள்

காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - விவசாய பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

The News Outlook
🕒 7 ஜூலை, 2026, 08:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - விவசாய பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விவசாய பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு* விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தென்மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ராம்பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், த.வெ.க கட்சியின் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், காரியாபட்டி தாலுகா முடுக்கன்குளம் பிர்க்காவில் உள்ள கோவிலாங்குளம், உடுப்புகுளம், ஆவாரம்பட்டி கண்மாய் நீர்பிடிப்பு மற்றும் நீர்வரத்தை தடுத்து அமைக்க உள்ள தனியார் சோலார் பிளாண்ட் டை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், காரியாபட்டி யில் 2025-2026 ல் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு பயிர்க்காப்பீடு உடனே வழங்கிட வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது தென் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், மகளிர் அணி மாநில செயலாளர் வாசுகி, மாவட்ட துணை செயலாளர்கள் ராமஜெயம், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டு த.வெ.க அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...