சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/கடும் வறட்சியால் நீர் தட்டுப்பாடு அபாயம் –பக்தர்கள் அச்சம்!
செய்திகள்

கடும் வறட்சியால் நீர் தட்டுப்பாடு அபாயம் –பக்தர்கள் அச்சம்!

The News Outlook
🕒 6 ஆக., 2026, 08:36 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கடும் வறட்சியால் நீர் தட்டுப்பாடு அபாயம் –பக்தர்கள் அச்சம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில், போதிய மழையில்லாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, விரைவில் நடைபெறவுள்ள ஆடி அமாவாசை திருவிழாவின் போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் பக்தர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வருகை தருவர். அந்த வகையில், நிகழாண்டிற்கான ஆடி அமாவாசை திருவிழா வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சதுரகிரி மலைப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது. மலையிலுள்ள நீர் ஓடைகள் முற்றிலும் வறண்டு, செடி-கொடிகள் மண்டிப் போய் காணப்படுகின்றன. மழை பெய்தால் மட்டுமே வழிபாட்டிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் மழையை எதிர்நோக்கி பக்தர்களும் அதிகாரிகளும் காத்திருக்கின்றனர்.

மேலும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மலைப்பகுதியில் காட்டுத் தீ விபத்துகள் ஏதேனும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் வனத்துறை மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகளிடையே நிலவி வருகிறது.

எனவே, இயற்கை கை கொடுக்காத பட்சத்திலும், ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...