சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் ஆய்வு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆடி அமாவாசை திருவிழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்பவர் என்பதால் மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் வனத்துறை,அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாணிப்பாறை அடிவாரத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் நேற்று மாலை ஆய்வு செய்தார். தாணிப்பாறை அடிவாரம், வனத்துறை நுழைவு வாயில், தற்காலிக பேருந்து நிலையம், போலீஸ்சர் கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனங்கள் சென்று வருவதற்கான மாற்றுப்பாதை, கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டிய இடங்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
செய்திகள்
சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் ஆய்வு
The News Outlook
🕒 23 ஜூலை, 2026, 02:17 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
