சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நடைபெற உள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் - மாவட்ட, மாநில, மண்டல நிர்வாகிகள் பங்கேற்பு
செய்திகள்

விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நடைபெற உள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் - மாவட்ட, மாநில, மண்டல நிர்வாகிகள் பங்கேற்பு

The News Outlook
🕒 3 ஜூலை, 2026, 02:42 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நடைபெற உள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் - மாவட்ட, மாநில, மண்டல நிர்வாகிகள் பங்கேற்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஆகஸ்ட் 17அன்று நடைபெற உள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான திருச்சி, கரூர், திண்டுக்கல், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைசெல்வன் அவர்கள் தலைமையில், அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன் அவர்கள் முன்னிலையில் பழைய மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆகத்து 17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர், தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளையொட்டி நடைபெற உள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வருகின்ற ஜூலை 15ஆம் தேதி திருச்சியில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள மண்டல அளவிலான ஆலோசனை கூட்டங்கள் குறித்ததான ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், மாநில மற்றும் மண்டல செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...