விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இரத்ததான முகாம்.விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டுத் தொண்டுத் திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சுருள் சங்கம், விருதுநகர் விடியல் அரிமா சங்கம், VHNSNC ரோட்டராக்ட் சங்கம் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது. துவக்க விழாவில் செஞ்சுருள் சங்க இணை அதிகாரி அ. மாரீஸ்வரி வரவேற்றார். கல்லூரி பரிபாலன சபைத் தலைவர் எம். சம்பத்குமார் தலைமை வகித்தார். உபதலைவர்கள் கே. ராமசாமி, எஸ். டெய்சிராணி, கல்லூரிச் செயலாளர் ஜெ. மகேஷ் பாபு, கல்லூரிப் பொருளாளர் டி. குமரன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் அ.சாரதி ஆகியோர் வாழ்த்தினர். விருதுநகர் விடியல் அரிமா சங்க தலைவர் செல்வநாதன், செயலாளர் பால் ஜோஸ்வா மோசஸ் மற்றும் பொருளாளர் வி. பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவில் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி முனைவர் ஆ.மோகன்ராஜ் நன்றி கூறினார். இம்முகாமில் 58 மாணவர்கள் இரத்த தானம் செய்தனர்.
செய்திகள்
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இரத்ததான முகாம்
The News Outlook
🕒 10 ஜூலை, 2026, 02:19 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
