சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/வத்திராயிருப்பில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது.
செய்திகள்

வத்திராயிருப்பில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது.

The News Outlook
🕒 26 ஜூலை, 2026, 07:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வத்திராயிருப்பில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி சேர்ந்த மோகன் என்பவர் வத்திராயிருப்பு - கூமாபட்டி சாலையில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இவர் வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்த வினோத் என்பவரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் வினோத் அடிக்கடி பெட்ரோல் பங்க்கிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று மாலை பெட்ரோல் பங்க்கிற்கு வந்து வினோத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கேட்ட அங்கு பணிபுரியும் சேது நாராயணபுரம் இந்திரா காலனியை சேர்ந்த மருதபாண்டி மனைவி சுதந்திரா(32) என்பவரை அவதூறாக பேசி, தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை வீசியதால் பங்க்கில் லேசாக தீப்பற்றி உள்ளது. இதுகுறித்து சுதந்திரா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார், வினோத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...