சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மாத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் செயல்படும் குழத்தைகள் அங்கன்வாடி மையம் ... அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.
செய்திகள்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மாத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் செயல்படும் குழத்தைகள் அங்கன்வாடி மையம் ... அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.

The News Outlook
🕒 10 ஜூலை, 2026, 12:59 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மாத்தூர் பகுதியில்  வாடகை வீட்டில் செயல்படும் குழத்தைகள் அங்கன்வாடி மையம் ... அடிப்படை வசதிகள் இல்லாமல்  தவிக்கும் குழந்தைகள்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மாத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் செயல்படும் குழத்தைகள் அங்கன்வாடி மையம்... அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மாத்தூர் ஊராட்சி பகுதியில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது .இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப நிலை கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 2025 ஆம் ஆண்டு அங்கன்வாடி கட்டிடம் சேதம் அடைந்ததால் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கன்வாடி மையத்திற்கு தேவையான அரிசி, சத்துணவு மாவு உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே சிறிய வீட்டில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், போதிய இடவசதி இல்லாமலும், குழந்தைகள் விளையாடுவதற்கும், கல்வி கற்பதற்கும் சிரமப்படுகின்றனர். மேலும் அங்கன்வாடி மையத்தில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி இல்லாமல் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.குழந்தைகள் இயற்கை உபாதைகள் கழிக்க வேண்டும் என்றால், அவர்களது வீட்டுக்கு குழந்தைகளை அனுப்பி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வாடகை கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தும் காணப்படுகிறது.வாடகை கட்டிட வீட்டில் செயல்பட்டு வரும் குழந்தைகள் அங்கன்வாடி மையம் போதிய அடிப்படை வசதி இல்லாமல் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் உடனடியாக புதிய கட்டடத்தைத் திறக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...