விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து மகன் மற்றும் 7 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டிற்கு வெளியே சிறுமி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சின்ன அண்ணன்(69) என்பவர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பாதிப்புக்கு உள்ளான அந்த சிறுமியின் தாயார் எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் எம்.ரெட்டியபட்டி காவல் நிலைய போலீசார் முதியவர் சின்ன அண்ணன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
The News Outlook
🕒 21 ஜூலை, 2026, 05:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
