சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகர் புதிய பேருந்து நிலைய பராமரிப்புக்கு ரூ.1.38 கோடி நிதி ஒதுக்கீடு
செய்திகள்

விருதுநகர் புதிய பேருந்து நிலைய பராமரிப்புக்கு ரூ.1.38 கோடி நிதி ஒதுக்கீடு

🕒 19 ஆக., 2026, 05:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் புதிய பேருந்து நிலைய பராமரிப்புக்கு ரூ.1.38 கோடி நிதி ஒதுக்கீடு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை பராமரிப்பு பணிகள் செய்ய தமிழக அரசு 2025 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 கோடியே 38 லட்சம் நிதி ஒதுக்கியது. ஒதுக்கிய நிதியில் பழைய வாகன காப்பகம் சீரமைப்பு செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்படும் என்றும் பஸ் நிலையத்தை சுற்றி CCTV கேமராக்கள் பொறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் வாகன காப்பகத்தில் எந்த வித வேலையும் செய்யப்படாமல் பஸ் நிலையத்திற்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வார காலமாக வாகன காப்பகத்தில் கட்டண வசூல் நடைபெற்று வருகிறது. வாகன காப்பகத்தில் பராமரிப்பு வேலைகள் முடியும் வரை கட்டணம் வசூல் செய்வதற்கு தாங்கள் தடை விதிக்க வேண்டும். மேலும் பராமரிப்பு வேலை முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் கழிப்பறை இன்றும் திறக்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் இதுவரை இலவச பொது கழிப்பிடமாக செயல்பட்ட இந்த கழிப்பறையை கட்டண கழிப்பறையாக மாற்ற நகராட்சி முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது. இதனால் பொது மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே முன்பு செயல்பட்டதை போல கழிப்பிடம் இலவச கழிப்பிடமாகவே செயல்பட தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . பஸ்நிலையத்தை சுற்றி CCTV கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும். வரும் பயணிகள் குடிப்பதற்கு நல்ல குடிநீர் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் புதிய பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் உள்ள கடைகள் மோசமான நிலையிலும், மாடியில் உள்ள அறைகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையிலும் உள்ளன. உயிர் பலி ஏற்படும் முன் மாடி அறைகளை சீரமைக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியில் செய்வதாக கூறப்பட்ட வேலைகள் நடைபெற்று உள்ளதா? அதன் தரம் எப்படி உள்ளது என நீங்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மாவட்டச் செயலாளர் காளிதாஸ் பொதுமக்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔