நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முன்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், நீட் மற்றும் சி.பி.எஸ்.இ. தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
டெல்லியில் இதே கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராடிய 'நீதிக்கான குடிமக்கள் இயக்கத்தினர்' மற்றும் மாணவர்கள் மீது டெல்லி போலீஸார் நடத்திய கொடூர தடியடிக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

