விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவார்பட்டியில் குருசாமி என்பவருக்கு சொந்தமான பிரபல காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் மறுசுழற்சி செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காகித பண்டல்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அனைத்து காகித பண்டல்களிலும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. சம்பவம் அறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான காகித பண்டல்கள் தீயில் எறிந்து சேதமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News
சிவகாசி அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து... பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
The News Outlook
🕒 28 ஜூலை, 2026, 10:12 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
