விருதுநகர் பேராலி சாலையில் உள்ள பஞ்சாலையில் மின் கசிவினால் இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சு பொதிகள் எரிந்து சேதமாயின. விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான பஞ்சாலை பேராலி சாலையில் உள்ளது. இதில், 50 கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடன் அங்கிருந்து தொழிலாளர்கள் தப்பி ஓடினர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் இயந்திரங்கள் பஞ்சுப் பொதிகள் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகின. இதுகுறித்து விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன
செய்திகள்
விருதுநகரில் பஞ்சாலையில் மின்கசிவினால் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் பஞ்சு பொதிகள் சேதம்.
🕒 28 ஜூலை, 2026, 11:34 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

