சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/முன்விரோதம் காரணமாக வாலிபர் கத்திக்குத்தி கொலை - இருவருக்கு வலைவீச்சு!
செய்திகள்

முன்விரோதம் காரணமாக வாலிபர் கத்திக்குத்தி கொலை - இருவருக்கு வலைவீச்சு!

The News Outlook
🕒 7 ஆக., 2026, 01:36 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
முன்விரோதம் காரணமாக வாலிபர் கத்திக்குத்தி கொலை - இருவருக்கு வலைவீச்சு!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் முத்துசாமிபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கனி என்பவரது மனைவி மாரிமுத்து(40). இவரது வீட்டருகே அதே பகுதியைச் சேர்ந்த தங்கையா என்பவர் அடிக்கடி மது போதையில் அசிங்கமாக பேசி தகராறு செய்து வந்துள்ளார். இதை மாரிமுத்துவின், சகோதரர் காளிராஜ் மகன் மணிகண்டன் (23) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதுகுறித்து தங்கையா மீது தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் மணிகண்டன் மற்றும் தங்கையா குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று சேத்தூர் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த மணிகண்டனிடம், தங்கையா மகன் மாணிக்கம் (21), உறவினர் ஈஸ்வரன் (18) ஆகியோர் தகராறில் ஈடுபட்டு மணிகண்டனை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர். காயமடைந்த மணிகண்டனை போலீஸார் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்த சேத்தூர் போலீஸார் மாணிக்கம், ஈஸ்வரன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...