மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணைகட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது எனவும் ,மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு வரும் நீர்வரத்து பாதிக்கப்படும் நிலை உள்ளதால் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் , மேகதாது பகுதியில் அணை கட்டப்படுவது தமிழகத்தின் விவசாயத்தையும் குடிநீர் தேவையையும் நேரடியாக பாதிக்கும் எனவும், இந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு கிடைக்கும் நீர்வரத்து கணிசமாக குறையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், காவிரி நீர்விநியோகத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் அதனை மீறி எந்த புதிய திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
செய்திகள்
மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
The News Outlook
🕒 1 ஆக., 2026, 07:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
