சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/காரியாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் தார் பிளாண்ட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது
செய்திகள்

காரியாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் தார் பிளாண்ட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது

The News Outlook
🕒 14 ஜூலை, 2026, 11:10 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காரியாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில்  பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் தார் பிளாண்ட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

காரியாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் தார் பிளாண்ட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மந்திரிஓடை பகுதியில், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் CDR இன்ப்ராகான் லிமிடெட் என்ற தனியார் தார் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியில் மந்திரிஓடை, கம்பிக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. மேலும் தனியார் தார் பிளாண்ட் ஆலையின் எதிர்ப்புறம் தனியார் பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த தனியார் தார் பிளாண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் அருகே குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்குறைவு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த தனியார் தார் பிளாண்ட் ஆலையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பலமுறை காரியாபட்டி வட்டாட்சியர், கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பலமுறை புகார் மனு அளித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து காரியாபட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காரியாபட்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தோப்பூர் கே.முருகன் தலைமையில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வரும் இந்த தனியார் தார் பிளாண்ட் ஆலையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இதுகுறித்து காரியாபட்டி வட்டாட்சியர் கூறுகையில் உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் தார் பிளாண்ட் ஆலையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...