விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காளியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த அர்ஜுனன் சிவனம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு வாய் பேச முடியாத அய்யனார் என்ற மகன் ஒருவரும் குருவுத்தாய் என்ற மகள் ஒருவரும் இருந்து வருவதாகவும் மகளின் பிள்ளையை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் கடந்த 15 நாட்களாக சிவனம்மாளை கவனிக்க முடியாத சூழ்நிலையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மனம் உடைந்த சிவனம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். அருகே இருந்தவர்கள் உடலில் எரிந்த தீயை அனைத்தனர். இதில் 60 சதவீதம் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 70 வயது மூதாட்டி தீக்குளித்து தற்கொலை முயற்சி
🕒 18 ஆக., 2026, 04:41 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
