சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை அடித்து நொறுக்கி தீ வைப்பு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
செய்திகள்

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை அடித்து நொறுக்கி தீ வைப்பு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

🕒 25 ஆக., 2026, 04:37 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை அடித்து நொறுக்கி தீ வைப்பு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்து செல்வம், வழக்கம்போல் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஆட்டோவை அடித்து சேதப்படுத்தியதுடன், அதனை தலைகுப்புற கவிழ்த்து தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது.

ஆட்டோ தீப்பற்றி எரிவதைப் பார்த்த முத்து செல்வம், உடனடியாக தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் தீ வேகமாக பரவியதால் ஆட்டோ முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.

இதற்கிடையே, அதே பகுதியில் நள்ளிரவு நேரத்தில் மதுபோதையில் வந்த மர்ம நபர்கள் சிலர் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய அதே நபர்கள்தான் ஆட்டோவையும் அடித்து நொறுக்கி தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோவை சேதப்படுத்தி தீ வைத்தவர்கள் யார், எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் கிடைக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔