சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பல்லாரி விலை கிடுகிடு உயர்வு வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தகவல்
செய்திகள்

பல்லாரி விலை கிடுகிடு உயர்வு வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தகவல்

🕒 26 ஆக., 2026, 11:01 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பல்லாரி விலை கிடுகிடு உயர்வு வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தகவல்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக பல்லாரி வெங்காயம் இருந்து வருகிறது நாடு முழுவதும் இதன் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட வறட்சி காரணமாகவும் வரத்து கணிசமாக குறைந்துள்ளது இதன் காரணமாக தொடர்ந்து பல்லாரியின் விலை உயர்ந்து வருகிறது கடந்த 10 , 15 தினங்களுக்கு முன்பு 100 ரூபாய்க்கு மூன்று கிலோ பல்லாரி விற்கப்பட்ட நிலையில் இன்று திருநெல்வேலியில் பல்லாரியின் விலை கிலோ 80 ரூபாயாக உயர்ந்துள்ளது தினசரி சந்தைகளில் என்பது ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் கிராமப்புறங்களில் நகர்ப்புறங்களில் சிறிய கடைகளில் 100 ரூபாய் வரை பல்லாரி விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது பாளையங்கோட்டை தினசரி சந்தையில் 80 ரூபாய் வரை பல்லாரி விற்கப்படும் நிலையில் சிறிய ரக பல்லாரிகள் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது உழவர் சந்தையில் பல்லாரின் விலை 56 ரூபாயாக உள்ளது ஆனால் வியாபாரிகள் பொதுமக்கள் காலையிலேயே பல்லாரியை வாங்கிச் சென்றதால் ஒரு மணி நேரத்தில் உழவர் சந்தையில் பல்லாரி தீர்ந்து விட்டதாக தெரிகிறது திருநெல்வேலிக்கு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் ஆந்திரா கர்நாடக மாநிலங்களில் இருந்து பல்லாரிகள் கொண்டு வரப்படும் வெளி மாநில பல்லாரிகளின் வரத்து கணிசமாக குறைந்ததால் (ஐந்து லாரிகளில் வல்லாரை கொண்டுவரப்படும் நிலையில் தற்போது ஒன்று அல்லது இரண்டு லாரிகள் மட்டுமே வந்து சேர்கிறது) விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔