சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க சதியா? 100+ பேரிடம் விசாரணை!
செய்திகள்

அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க சதியா? 100+ பேரிடம் விசாரணை!

🕒 26 ஆக., 2026, 10:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க சதியா? 100+ பேரிடம் விசாரணை!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணம் பதுக்கி வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் அதிகாரியை சிக்கவைத்ததாக கூறப்படும் சதி வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி தலைமையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவினர் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் நேற்றும் இன்றும் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. முன்னதாக, நெல்லை தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணம் வைக்கப்பட்டிருந்ததாக கூறி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. அதிகாரியை சிக்க வைப்பதற்காக திட்டமிட்டு பணம் வைக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சதி தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டது. பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யார் பணத்தை வைத்தது, அதிகாரியை சிக்கவைக்க திட்டம் தீட்டப்பட்டதா, இதில் வேறு அதிகாரிகள் அல்லது ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்புத்துறை அலுவலர்கள் ஊழியர்கள் தான் சிறப்பு சாதனை நடைபெற்றுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔