சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/வி.கே.புரம் டாணாவில் குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் புகுந்த கரடியால் பொதுமக்கள் அச்சம்
செய்திகள்

வி.கே.புரம் டாணாவில் குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் புகுந்த கரடியால் பொதுமக்கள் அச்சம்

🕒 25 ஆக., 2026, 10:26 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வி.கே.புரம் டாணாவில் குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் புகுந்த கரடியால் பொதுமக்கள் அச்சம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் கடந்த சில மாதங்களாகவே கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. பாபநாசம் மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள அனவன்குடியிருப்பு, டாணா, சங்கரபாண்டியபுரம் மற்றும் திருப்பதியாபுரம் ஆகிய பகுதிகளில் மலைகளில் இருந்து இறங்கி வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டாணா பொதிகை நகர் காலனியில் ஆள் நடமாட்டம் இருந்தபோதே, குட்டியுடன் வந்த கரடி ஒன்று திடீரென வீட்டின் மதில் சுவர் மீது ஏறி உள்ளே நுழைய முயன்றுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக பட்டாசுகளை வெடித்தும், பெருஞ்சத்தம் எழுப்பியும் கரடியை விரட்டியடித்தனர்.

இந்தச் சம்பவத்தை அப்பகுதியினர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இரவு பகலாக வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தபோதிலும், குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவது குறையவில்லை. எனவே, அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன், வனத்துறையினர் உடனடியாகக் கூண்டு வைத்து கரடிகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔