சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/நீதிமன்றத்தில் 80வது சுதந்திர தின விழா: தேசியக் கொடியேற்றி மரக்கன்றுகள் நட்ட நீதிபதிகள்
செய்திகள்

நீதிமன்றத்தில் 80வது சுதந்திர தின விழா: தேசியக் கொடியேற்றி மரக்கன்றுகள் நட்ட நீதிபதிகள்

🕒 15 ஆக., 2026, 10:14 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நீதிமன்றத்தில் 80வது சுதந்திர தின விழா: தேசியக் கொடியேற்றி மரக்கன்றுகள் நட்ட நீதிபதிகள்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி எஸ்.கே. அங்காள ஈஸ்வரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அனைவருடனும் தேசிய மரியாதை செலுத்தினார்.

தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் சார்பு நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் மற்றும் நீதித்துறை நடுவர் எண்–2 ஐயப்பன் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.

மேலும், விருதுநகர் பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சீனிவாசன், ரூபன் ராஜ், கஜேந்திரன், அரசு வழக்கறிஞர்கள் பி. பரணிதரன், கே. சுந்தரவேல், பி. கருணையானந்தம், டி. முருகன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

விருதுநகர் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் ராஜதுரை, வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து மரக்கன்றுகளை நட்டு, சுதந்திர தினத்தை பசுமை பாதுகாப்பு உறுதியுடன் கொண்டாடினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔