சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/60 மாணவர்கள், 60 நிமிடங்கள், 12 யோகாசனங்கள்! – உலக சாதனை நிகழ்ச்சி.
செய்திகள்

60 மாணவர்கள், 60 நிமிடங்கள், 12 யோகாசனங்கள்! – உலக சாதனை நிகழ்ச்சி.

🕒 15 ஆக., 2026, 05:39 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
60 மாணவர்கள், 60 நிமிடங்கள், 12 யோகாசனங்கள்! – உலக சாதனை நிகழ்ச்சி.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தும்முசின்னம் பட்டி பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் யோகா உலக சாதனை நிகழ்ச்சியாக 60 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற சுமார் 60 நிமிடங்களில் 12 விதமான யோகாசனங்கள் செய்து காட்டும் உலக சாதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்து, மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் , குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை முற்றிலும் தடுக்கும் வகையிலும், குழந்தைகளுக்கு தேவையற்ற உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வழங்கிடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவ, மாணவியர் 12 விதமான யோகாசனங்களை செய்து காண்பித்தனர். இதில் மாணவ, மாணவியர்கள் வரிசையாக நின்று தொடர்ந்து 30 நிமிடங்கள் 12 யோகாசனங்களை செய்தனர். அதனைத் தொடர்ந்து ஒரு நிமிட இடைவெளிக்கு பின் மீண்டும் துவங்கி 30 நிமிடங்கள் இடைவிடாமல் யோகாசனங்களை செய்து காண்பித்தனர். இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற யோகா மாணவ, மாணவியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் யோகா ஆசனங்களை செய்து சாதனை படைத்தனர். மேலும் பெற்றோர்கள் அவர்களை கரங்களை தட்டி மாணவ, மாணவியர்களை உற்சாகப்படுத்தினர். யோகா மாணவ மாணவியர்களின் இந்த சாதனை முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து குளோபல் புக் ஆஃப் யோகா வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற நிறுவனம் அங்கீகரித்து இந்த சாதனை முயற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி கௌரவித்தது. இந்த உலக சாதனையில் ஈடுபட்ட மாணவ மாணவியர்களையும், அவர்களுக்கு துணையாக இருந்த யோகா ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்குபாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔